கைதி படத்தின் இந்தி ரீமேக் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.
Also Read | "யோவ் ஜானி".. 'வாரிசு' பட பாடல் குறித்து ஜானி மாஸ்டருக்கு தமன் ஜாலி பதில் ட்வீட்!
கடந்த 2019 தீபாவளிக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
ஒரு இரவில் முன்னாள் கைதியான கார்த்தி, வில்லன் கும்பலால் பாதிக்கப்பட்ட போலிஸ் அதிகாரிகளை எப்படி காப்பாற்றினார் என்பதையும்,போலிசால் பிடிக்கப்பட்ட போதை மருந்துகளை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து எடுத்துக் கொண்டு போக வரும் வில்லன் கும்பல் பற்றியும், காவல் நிலையத்தில் ஒரு கான்ஸ்டபிள், 5 கல்லூரி மாணவர்களை வைத்து அந்த இரவை எப்படி கடக்கிறார்கள் என்பதையும், விடுதியில் தங்கி இருக்கும் தன் பெண் குழந்தையை பார்க்க வரும் கைதி கார்த்தி பற்றியும், படம் பேசுகிறது.
இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. சாம் சி எஸ் இசையில் சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்து இருந்தார். பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றினார்.
தற்போது இந்த கைதி திரைப்படம் இந்தியில் உருவாகி வருகிறது.
கைதி படத்தின் இந்தி ரீமேக்கின் ஆரம்ப ஷூட்டிங் இந்த ஆண்டு ஜனவரியில் துவங்கியது. இந்த ரீமேக் படத்தை நடிகர் அஜய் தேவ்கனே இயக்குகிறார். மேலும் அஜய் தேவ்கன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தில் நடிகை அமலாபால் சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கனுடன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் அமலா பால் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த 'போலா' படத்தில் நடிகை தபு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தி ரீமேக்கில் நரேன் கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி அந்த ரோலில் நடிகை தபு நடிக்கிறார். நடிகை தபு தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம் படங்களில் நடித்தவர் ஆவார்.
இந்த இந்தி ரீமேக் 'போலா' படத்தில் நடிகை தபு நடிக்கிறார். கைதி படத்தின் தமிழ் மூலத்தில் மைய பெண் கதாபாத்திரம் இருக்காது. அதனால் இந்தி ரீமேக்கில் நரேன் கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி அந்த ரோலில் நடிகை தபு நடிக்கிறார். நடிகை தபு தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம் படங்களில் நடித்தவர் ஆவார்.
இந்த படத்துக்கு போலா (Bholaa) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அசீம் பஜாஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று ரிலீசாக உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. தந்தையை எதிர் நோக்கி காத்திருக்கும் பெண் குழந்தை, ஜெயிலில் இருந்து வெளியேறும் அஜய் தேவ்கன் ஆகியோரது காட்சிகள் டீஸரில் அமைந்துள்ளன. 3டி வடிவத்திலும் இந்த திரைப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | ரஜினியின் பாபா பட ரிலீஸில் அனிருத்..? வைரலாகும் Throwback போஸ்டர்!