விஜய்யின் 'தளபதி 64' படத்தில் இணைந்த மற்றொரு 'கைதி' பட நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தீபாவளிக்கு வெளியான தளபதி விஜய்யின் 'பிகில்' திரைப்படம் 50 நாட்களை நிறைவு செய்தது. இதனை படக்குழுவினர், ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.  நடிகர் விஜய் தற்போது 'தளபதி 64' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், பிரேம், சஞ்சீவ், ஸ்ரீநாத், அழகம் பெருமாள், சுனில் ரெட்டி, விஜே ரம்யா, கௌரி கிஷன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்த படம் குறித்து படக்குழுவினர் அவ்வப்போது அப்டேட் வழங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 'கைதி' படத்தில் காமெடியில் கலக்கிய விஜய் டிவி தீனா இந்த படத்தில் நடிக்கிறார். மேலும் அவருக்கு படம் முழுக்க வரும் முக்கியமான வேடமாம்.

Kaithi fame Dheena to act in Actor Vijay's Thalapathy 64

People looking for online information on Anirudh Ravichander, Dheena, Lokesh Kanagaraj, Thalapathy 64, Vijay will find this news story useful.