போடு! "காத்து வாக்குல ரெண்டு காதல்" .. அடுத்த SINGLE எப்போ தெரியுமா? செம அப்டேட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Chennai: காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூன்றாவது சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

விஷாலுக்கு வில்லனான எஸ்.ஜே. சூர்யா! வெளிவந்த வேற மாரியான OFFICIAL அப்டேட்!

முதல் இரண்டு சிங்கிள்

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார்.  விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் 'நான் பிழை' மூன்றாவது சிங்கிள் பாடல் ஜனவரி 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. போஸ்டரில் விஜய் சேதுபதியும் நயன்தாராவும் உள்ளனர்.

R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran

இந்த படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் கடந்த 2020 ஆண்டு இறுதியில் தொடங்கி ஐத்ராபாத், சென்னையில் நடந்தது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு தாமதமானது.  இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நிறைவுபெற்றள்ளது. இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ.

நடிகர் மோகன் ரீ என்ட்ரி! தமிழ் சினிமாவில் மீண்டும் ஹீரோவாக! போஸ்டருடன் வெளியான செம அப்டேட்!

கண்மனி - காதீஜா

காதீஜா எனும் பெயரில் சமந்தா நடிக்கிறார். கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படம் வருகிற பிப்ரவரி மாதம் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் மூன்று முதல் லுக் போஸ்டர்  (15.11.2021) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த படத்தின் டப்பிங் ஏற்கனவே துவங்கியுள்ளது.இதனை புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kaathuvaakula Rendu Kaadhal Movie 3rd Single Update

People looking for online information on Anirudh, அனிருத், காத்துவாக்குல ரெண்டு காதல், சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி, Kaathu Vaakula Rendu Kaadhal, Nayanthara, Samantha, Vignesh Sivan, Vijay Sethupathi will find this news story useful.