பிரபல OTT-யில் ரிலீசாகும் சூப்பர் ஹிட் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.. எப்போ? எதுல? செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம் பிரபல ஒடிடியில் வெளியாக உள்ளது.

Kaathu Vakkula Rendu Kaadhal Movie OTT Release on Disney plus Hotstar
Advertising
>
Advertising

Also Read | புதிய லுக்கில் 'கும்கி' லட்சுமி மேனன்.. ரசிகர்களை கவர்ந்த செம வைரல் வீடியோ!

'நானும் ரௌடிதான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மூவரும் இரண்டாவது முறையாக இணைந்த படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

இவர்களோடு சேர்ந்து சமந்தாவும் இந்த படத்தில் இணைந்தார். மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் வழங்க விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக இப்படத்தை தயாரித்து இருந்தார்.

இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  கடந்த மாதம்  ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்டது.

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க, கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க, ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடித்தார்.

இந்த படம் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெறப்பட்டது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வரும் மே மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kaathu Vakkula Rendu Kaadhal Movie OTT Release on Disney plus Hotstar

People looking for online information on Kathu vaakkula rendu kadhal, KRK movie, Nayanthara, OTT Release, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.