ரொமான்ஸ் ததும்பும் காத்துவாக்குல ரெண்டு காதல் .. படத்தோட ரன்னிங் டைம் எவ்வளவு? செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரௌடிதான் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மூவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

Advertising
>
Advertising

Also Read | நடிகர் அஜித்தின் 51 வது பிறந்தநாள்.. சூப்பர் ட்ரீட் கொடுக்கும் முன்னணி தமிழ் சேனல்! முழு தகவல்

இவர்களோடு சேர்ந்து சமந்தாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் வழங்க விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.  ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீஸாகிறது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது.

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் முன்னோட்டம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது விஜய் சேதுபதி இருவரையும் காதலிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ரொமான்ஸ் ததும்பும் காத்துவாக்குல ரெண்டு காதல் .. படத்தோட ரன்னிங் டைம் எவ்வளவு? செம அப்டேட் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kaathu Vakkula Rendu Kaadhal Movie Censored U/A

People looking for online information on Kathu vaakkula rendu kadhal, KRK movie, KRK movie Updates, Nayanthara, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.