நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மீண்டும் இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி ஐத்ராபாத், சென்னையில் நடந்தது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நிறைவுபெற்றுள்ளது.
இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான டூ டூ டூ பாடல் செப்டெம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.