காத்துவாக்குல ரெண்டு காதல்.. வெளிநாட்டு தியேட்டர் & OTT உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது

Advertising
>
Advertising

KGF ஸ்டைலில் உருவாகும் புதிய படம்.. கொளுத்தும் வெயிலில் கீர்த்தி சுரேஷ் - நானி..! தெறி அப்டேட்

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் கடந்த 2020 ஆண்டு இறுதியில் தொடங்கி ஐத்ராபாத், சென்னையில் நடந்தது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு தாமதமானது.  இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் சென்ற ஆண்டு நிறைவுபெற்றது. இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ. காதீஜா எனும் பெயரில் சமந்தா நடிக்கிறார். கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் மூன்று முதல் லுக் போஸ்டர்  (15.11.2021) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. போஸ்டர்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படம் சென்ற ஆண்டு டிசம்பரில் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.  இந்த படம் வரும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு தியேட்டர் ரிலீஸ் உரிமத்தையும், ஓடிடி உரிமத்தையும் United India Exporters நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளது.

போடு வெடிய..15 வருடத்தில் 5 ஆவது முறை.. நடிகர் அஜித் உடன் இணைந்த MOST WANTED சினிமா பிரபலம்!

தொடர்புடைய இணைப்புகள்

Kaathu Vaakula Rendu Kaadhal Movie Overseas Digital Theatre Rights Bagged by UIE

People looking for online information on Kaathu Vaakula Rendu Kaadhal, KVRK, Nayanthara, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.