ஆடை பட தயாரிப்பாளரின் புதிய படம்!! ஹீரோ காளி வெங்கட் ! ஹீரோயினாக பிக்பாஸ் பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காளி வெங்கட் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடிகர் காளி வெங்கட் முன்னணி நடிகர்களுடன் இணைந்து துணை நடிகர் மற்றும் இணை நடிகராக நடித்து புகழ்பெற்றவர். பல படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராக  நடித்திருக்கும் காளி வெங்கட்டினை சூரரைப் போற்று திரைப்படத்தில் கூட பார்த்து ரசிகர்கள் பாராட்டினர்.

இந்நிலையில் ஆடை திரைப்பட தயாரிப்பாளர் விஜி சுப்ரமணியம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. இதேபோல் இந்த படத்தில் நாயகியாக பிக்பாஸ் 2-வது சீசன் டைட்டில் வின்னரான ரித்விகா நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் பிரம்மா இயக்கும் இந்த படத்துக்கு மாடு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பல விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

ALSO READ:"அந்த லிரிக்ஸ் தான் இன்ஸ்பிரேஷன்!"... #தனுஷ் பகிர்ந்த தெறிக்க விடும் லேட்டஸ்ட் ஃபோட்டோ!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kaali Venkat Riythvika Starring Maadu By debut director Bramma

People looking for online information on Aadai, Kaali Venkat, Riythvika will find this news story useful.