''என் கண்ணு முன்னாடியே தனுஷ் சார கலாய்ச்சாங்க'' - 'காக்கா முட்டை' பிரதர்ஸ் ஜாலி பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் - வெற்றிமாறன் இணைந்து தயாரித்து எம்.மணிகண்டன் இயக்கியிருந்த படம் 'காக்கா முட்டை'. இந்த படத்தில் சின்ன காக்கா முட்டை பெரிய காக்கா முட்டையாக விக்னேஷ், ரமேஷ் மிகவும் அசத்தலாக நடித்திருந்தனர்.

இரண்டு எளிய சிறுவர்களின் பீட்சா கனவு குறித்து பேசிய இந்த படம் மறைமுகமாக சமூக ஏற்றத் தாழ்வுகளை பேசியது.  இந்த படம் சிறந்த குழந்தைகள் படம் என்ற தேசிய விருது பெற்றது. மேலும் விக்னேஷ், ரமேஷ் ஆகியோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் என்ற தேசிய விருது கிடைத்தது. எந்த பெரிய நட்சதத்திரங்களும் இல்லாத இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விக்னேஷ் மற்றும் ரமேஷ் இணைந்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தனர். அப்போது தனுஷ் குறித்து பேசிய விக்னேஷ், ''வளர்ந்து வரும் நடிகர்களுக்கு அவர் மிகச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார். அவரைப் பார்த்தால் அவர் வெற்றிபெற்றது குறித்து கேட்க மாட்டேன். அவர் நிறைய விமர்சனங்களை சந்திருச்சிருக்காங்க, அந்த விமர்சனங்களை எப்படி எடுத்துக்கிட்டீங்க என்று கேட்பேன்'' என்றார்.

தொடர்ந்து பேசிய ரமேஷ், ''அவருடைய காதல் கொண்டேன் படத்துக்கும் வட சென்னை படத்துக்கும் அவர பார்த்தா நிறைய வித்தியாசம் தெரியுது. நிறைய பேர் என் கண் முன்னாடியே அவர கலாய்ச்சாங்க. நான் எந்த இடத்துலயும் அவர விட்டுக்குடுக்க மாட்டேன். நான் அவருடைய ரசிகன். அந்த விமர்சனங்களை எல்லாம் எப்படி கடந்து வந்தார்னு அவர் சொன்னா நல்லா இருக்கும்'' என்றார்.

''என் கண்ணு முன்னாடியே தனுஷ் சார கலாய்ச்சாங்க'' - 'காக்கா முட்டை' பிரதர்ஸ் ஜாலி பேட்டி வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kaakka Muttai brothers speaks about Vetrimaaran, Dhanush | தனுஷ், வெற்றிமாறன் குறித்து மனம் திறக்கும் காக்கா முட்டை பிரதர்ஸ்

People looking for online information on Dhanush, Kaakka Muttai, Vetrimaaran will find this news story useful.