விஜய் டிவியில் உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷனுக்காக ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. அப்போது கவின் சேரன் , மற்றும் ஷெரினை அவர்கள் ஏற்கனவே பிரபலமானவர்கள் என்று கூறி வனிதா நாமினேட் செய்தார்.

அந்த காரணம் தவறு என்று வனிதா, கவினை கடுமையாக எதிர்த்தார். இதனையடுத்து இருவரிடையே கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது புரோமோவில் அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்தியா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.
பின்னர் சாக்ஷியுடன் வனிதாவும் ஷெரினும் கவின் குறித்து பேசுகின்றனர். இந்நிலையில் இதுகுறித்த பேசிய முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் காஜல் பசுபதி ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், ''ஷெரின் டைட்டில் வின் பண்ணனுமா? இந்த வீக் தாங்குவாளானு பாருமா'' என்று சாக்ஷியை கலாய்த்தார்.
பின்னர் மற்றொரு பதிவில், ''கேப்டனா சொல்றேன், நீங்க யாருமே எதுவுமே பண்ணக்கூடாது. கேப்டனா, நான் பிக்பாஸ கேள்வி கேட்பேன். இப்படியே அமைதியா அவ சொல்றத கேட்டு கைகட்டியே இருங்க பிக்பாஸ்'' என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார்.