நடிகர் பரத்தும் நடிகை சந்தியாவும் லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இப்படத்தை இயக்கினார். பரத், சந்தியா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த இந்த திரைப்படம் தமிழகமெங்கும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் தற்போது காதல் படத்தின் ஜோடிகளான பரத்தும் சந்தியாவும் 16 வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்துள்ளனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள பரத், ''16 வருடங்களுக்கு முன்னர் இந்த நாள். எனது வாழ்க்கையை மாற்றிய நாள். காதல் எனது திரைப்பயணத்தில் ஒரு மைல்க்கல். ஐஸ்வர்யாவும் முருகனும் அப்போதும் இப்போதும்..'' என அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட ரீசன்ட் புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்து, இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.