“யானைகளின் வீட்டுக்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்!” - காடன் டிரெய்லர் & ரிலீஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் பிரபு சாலமன் எழுதி இயக்கும் திரைப்படம் காடன்.

ராணா டகுபாட்டி, விஷ்ணு விஷால் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.அஷோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷாந்தனு மோயித்ரா இசையமைத்துள்ளார். பிரபல Eros Motion Pictures தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி மிரட்டி வருகிறது.

இந்த டிரெய்லரில் இருந்து காட்டு யானைகளின் வழித்தடத்தில் கார்ப்பரேட் உதவியுடன் அதிகாரத்தில் இருக்கும் குறிஞ்சிநாதன் ஆக்கிரமிப்பதையும், இதனால் பாதிக்கப்படும் யானைகளின் வாழ்வாதாரத்துக்காக அப்பகுதி மக்கள் போராடும் வலுவான திரைக்கதையை புரிந்துகொள்ள முடிகிறது. டிரெய்லரின் முடிவில் “யானைகளின் வீட்டுக்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்!” என்று ராணா கூறும் வசனம் ஒன்றும் வருகிறது.

பிரபு சாலமன் இயக்கத்தில் முதன்முறையாக ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மார்ச் 26-ல் திரைக்கு வருகிறது.

ALSO READ: உயரத்தில் இருந்து குதித்த ஃபகத் ஃபாசில்.. ஷூட்டிங்கில் நடந்த விபரீதம்!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kaadan Rana Daggubati Prabhu Solomon Vishnu Vishal Trailer காடன்

People looking for online information on Eros Now, Kaadan, KaadanTrailer, Prabhu Solomon, Rana Daggubati, Vishnu Vishal will find this news story useful.