விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷுடன்... முதல் நாளே கேக் வெட்டி 'கொண்டாடிய' ரணசிங்கம் டீம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே, முனீஸ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் க/பெ ரணசிங்கம். கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் தற்போது OTT பிளாட்பார்ம்களில் புதிய படங்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் ஜிப்ரான் இசையமைப்பில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் க.பெ ரணசிங்கம் Zee 5-ல் நேற்று வெளியாகி இருக்கிறது. ரசிகர்களின் நெஞ்சை தொடும் வகையில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து சமூக வலைதளங்களில் பாசிட்டிவான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் கருத்துக்களை பார்த்து மகிழ்ந்து போன படக்குழு கேக் வெட்டி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Ka Pae Ranasingam Movie Team Celebrate the Success

People looking for online information on Aishwarya Rajesh will find this news story useful.