K.S. ரவிக்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு! வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் தலைச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் K S ரவிக்குமார்.

K S Ravikumar Raghava Lawrance New Movie Pooja Stills
Advertising
>
Advertising

ராகவா லாரன்சின் பிறந்த நாளன்று டிரைடென்ட் ஆர்ட்ஸ், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கும் ராகவா லாரன்ஸ், எல்வின் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து விநியோகித்துள்ள டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

K S Ravikumar Raghava Lawrance New Movie Pooja Stills

கே எஸ் ரவிக்குமார் இயக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இதுவரை ஏற்றிராத மாஸான சிறப்பு கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க, எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.  இப்படத்தின் அலுவல் ரீதியான பூஜை இன்று நடந்தது. இதில் ரவிக்குமார், லாரன்ஸ், எல்வின் கலந்து கொண்டனர். 

அதிரடி ஆக்ஷன், கலகலப்பான காமெடி, மனதைத் தொடும் எமோஷன் நிறைந்த இந்த புதிய திரைப்படத்திற்காக கே எஸ் ரவிக்குமார், ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் முதல் முறையாக இணைகின்றனர். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

மற்ற செய்திகள்

K S Ravikumar Raghava Lawrance New Movie Pooja Stills

People looking for online information on K.S. Ravikumar, KSR, Raghava Lawrance will find this news story useful.