2 வயசிலேர்ந்து அவங்க நடிப்பை பார்த்து வளர்ந்தேன்! ரசிகையாக இருந்த நடிகை உருக்கமான பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஊர் முழுக்க கொரோனா பிரச்சனையால் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்க, இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில்,  திரைத்துறையும் முடங்கி உள்ளது. இந்நிலையில் JJ ஃபெட்ரிக் இயக்கத்தில், ஜோதிகாவின் நடிப்பில் உருவான படமான பொன்மகள் வந்தாள் நேரடியாக அமேஸான் பிரைமில் வெளியானது.

Advertising
Advertising

ஜோதிகாவுடன் பாக்யராஜ், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ளார். படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வரும் நிலையில், சில்லு கருப்பட்டி படத்தில் நடித்த நிவேதிதா சதீஷ் படத்தைப் பற்றி தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளது, ‘இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு நிமிஷம் கூட கண்ணை எடுக்க முடியவில்லை. இயக்குனர் ஃபெட்ரிக்குக்கு வாழ்த்துக்கள். இந்தப் படம் மிகவும் முக்கியமான படம். ஜோ மேடம் படங்களை நான் இரண்டு வயது முதல் பார்த்து ஆச்சரியப்பட்டு வருகிறேன். பொன்மகள் வந்தாள் என்னை ஆச்சரியப்படுத்தத் தவறவில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

கண்களில் இருந்து வழியும் கண்ணீரைத் துடைக்காமல் இந்தப் படத்தின் இறுதிக் காட்சிகளைப் பார்க்க முடியாது.  இத்தகைய உலகில் இந்தச் சூழலில்தான் நாம் இன்னும் வாழ்கிறோம் என்பதை சொல்வதுதான்  இப்படத்தின் வெற்றி என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Jyothika starrer Ponmagal Vanthal reviews by film stars and fans

People looking for online information on Amazon Prime, Jyothika, Ponmagal Vandhal Tamil will find this news story useful.