ஜோதிகாவின் SOCIAL MEDIA எண்ட்ரி.. “என் பொண்டாட்டி.. STRONGEST”.. சூர்யாவின் தெறிக்கவிடும் வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி இருக்கிறார்.  இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை தம்முடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நடிகர் சூர்யா இன்ஸ்டாகிராமில் ஜோதிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

90களில் இருந்தே பலருக்கும் விருப்பமான நடிகையாக வலம் வந்த ஜோதிகா, அஜித், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து அசத்தி வரும் ஜோதிகா, அண்மையில் பொன்மகள் வந்தாள், ராட்சசி, ஜாக்பாட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 

இந்நிலையில் தான் ஜோதிகா இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கியதை தம்முடைய சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்து, வாழ்த்துச் செய்தியை பதிவிட்ட சூர்யா, அதில் ஜோதிகாவை குறிப்பிட்டு, “என் பொண்டாட்டி Strongest” என குறிப்பிட்டிருக்கிறார்.

சூர்யாவின் இந்த போஸ்ட் வைரலாகி வருகிறது. நடிகை ஜோதிகாவுக்கு நடிகர் சூர்யா உறுதுணையாக இருந்து வருவது பல்வேறு வகையிலும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நடிகை ஜோதிகாவை சமூக வலைதளங்களில் பார்க்க முடியாமல் இருந்த நிலையில் தற்போது ஜோதிகா இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கி இருக்கிறார்.

இதனிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு இமாலயா சென்ற ஜோதிகாவின் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில் ஒன்றை பதிவிட்டுதான், சூர்யா தம் வாழ்த்து செய்தியை பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து ஜோதிகா தம்முடைய இன்ஸ்டாகிராமில், “முதல்முறையாக சோசியல் மீடியாவிற்கு நான் வந்திருக்கிறேன்.. என்னுடைய லாக்டவுன் டைரி குறித்த பாசிட்டிவான பல்வேறு விஷயங்களை பகிரவிருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தில் கடைசியாக காணப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது ஜெய்பீம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். 

இதனிடையே மணிரத்தினம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபிகேசன் தயாரிப்பில் நெட்ஃபிளிக்ஸில் உருவான நவரசா தொகுப்பில் கௌதம் மேனன் இயக்கிய ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படத்தில் சூர்யா நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனை அடுத்து சூர்யா தன்னுடைய சொந்த நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜெய் பீம், உடன்பிறப்பே, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், ஓ மை டாக் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார்.

இதில் சூர்யா நடித்திருக்கும் ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் மாதமும், சசிகுமாருடன் இணைந்து ஜோதிகா நடித்திருக்கும் உடன்பிறப்பே திரைப்படம் அக்டோபர் மாதமும், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படம் செப்டம்பர் மாதமும், அருண் விஜய் நடித்திருக்கும் ஓ மை டாக் திரைப்படம் டிசம்பர் மாதமும் அடுத்தடுத்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளன.

Also Read: யுவன் பர்த்டே .. பாடிய தனுஷ்.. சிம்பு.. தெறிக்கவிடும் வீடியோ.. எஞ்சாமிகளுடன் தனுஷ் ..Viral ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Jyothika social media entry suriya viral post ஜோதிகா சூர்யா

People looking for online information on Jyothika, Suriya will find this news story useful.