நடிகை ஜோதிகா சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதை பெற உள்ளார்.
Also Read | நானி& கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தசரா'.. சந்தோஷ் நாராயணன் இசையில் 1st SINGLE எப்போ? செம அப்டேட்
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 12-ல் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடியில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
கேப்டன் கோபிநாத் அவர்களின் ஏர் டெக்கான் நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து Simply Fly என்ற கோபிநாத்தின் புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட வட்டார மொழி படமாகவும் சூரரைப் போற்று சாதனை படைத்தது.
இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அபர்ணா பாலமுரளியும், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் குமார் வென்றுள்ளார்.
மேலும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை சுதா கொங்கரா, ஷாலினி உஷாதேவி ஆகியோர் வென்றனர். மேலும் சிறந்த படத்திற்கான தேசிய விருதை 2டி நிறுவனம் கைப்பற்றியது.
சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த 68வது திரைப்பட விருதுகள் அறிவிக்கும் நிகழ்வில் இதனை மத்திய அரசு சார்பில் தகவல் & ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில் நாளை புது டெல்லியில் நடைபெறும் 68 வது தேசிய விருது வழங்கும் விழாவில் சூரரைப் போற்று படத்திற்காக 2டி நிறுவனம் சார்பில் நடிகை ஜோதிகா, தேசிய விருதை பெற உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை புது டெல்லி விமான நிலைய வரவேற்பில் 2டி நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையை நடிகை அபர்ணா பாலமுரளி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சிறந்த படத்திற்கான தேசிய விருதை 2டி நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
சூரரைப் போற்று படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Also Read | செம..தேசிய விருது வழங்கும் விழா.. டெல்லிக்கு சென்ற சூரரைப் போற்று படக்குழு! வைரல் போட்டோஸ்