அட்ரா சக்க..!!.. சிறப்பு அங்கீகாரத்துக்கு தேர்வு செய்யப்பட்ட ஜோதிகா நடித்த பிரபல திரைப்படம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துபாய் எக்ஸ்போவில் பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படத்தை திரை விழாவில் ஜோதிகா நடித்த ‘காற்றின் மொழி’ திரைப்படம் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

உலகின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சி அக்டோபர் 1-ஆம் தேதி அன்று துபாயில் திறக்கப்பட்டது. 2021 மற்றும் மார்ச் 2022 வரை இந்த வர்த்தக கண்காட்சி  தொடரவுள்ளது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் பங்கேற்கின்றன. இந்தியா தனது தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், சேவைத் துறை மற்றும் பிற துறைகளை விளம்பரப்படுத்தும் இந்நிகழ்வில் கலாச்சாரம் & சினிமா உட்பட  பெரிய அளவில் பங்கேற்பு செய்கிறது.

இதில் இந்திய நாட்டு சினிமாவை விளம்பரப்படுத்தும்  திட்டத்தின் ஒரு பகுதியாக FICCI FLO நிறுவனம், பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படத்தை திரை விழாவில் திரையிட ஏற்பாடு செய்துள்ளது. இவ்விழா 2022 ஜனவரி 18 மற்றும் 19 தேதிகளில் இந்தியா பெவிலியன் ஆடிட்டோரியத்தில்  நடைபெறுகிறது.

இத்திருவிழாவை FICCI FLO நிறுவனத்தின் அறிவு சார் பங்குதாரரான,   Whistling Woods International (WWI) நிறுவனம் நடத்துகிறது. துபாய் எக்ஸ்போவில் திருவிழாவின்போது உங்கள் 'காற்றின் மொழி' திரைப்படம் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜோதிகா & விதார்த் இணைந்து நடித்த இந்த திரைப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார்.

இந்த தகவலை FICCI FLO தலைவர் உஜ்வாலா சிங்கானியா மற்றும் WWI தலைவர் சுபாஷ் காய் ஆகியோர் தெரிவித்து வாழ்த்தும் கூறியுள்ளனர். இந்தியா சார்பிலானா ஒரு வீடியோ ஷோ ரீலை இந்த இணைப்பில்  பார்க்கலாம்.

இணைப்பு இங்கே https://www.voutube.com/watch?y=ToluftPa1kM

இதனிடையே நடிகை ஜோதிகா நடித்த, 50வது திரைப்படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம், கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இரா.சரவணன் இயக்கிய இந்த திரைப்படம் அண்ணன் தங்கை செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதில் ஜோதிகாவுக்கு அண்ணனான சசிகுமாரும், கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Jyothika Kaatrin mozhi Dubai special recognition Film Festival

People looking for online information on Jyothika, Jyotika, Kaatrin Mozhi, Radha Mohan, Udanpirappe, Vidaarth will find this news story useful.