விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு எப்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கவே செய்கிறது.

விஜய் டிவி நிகழ்ச்சிகள்:
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சமாதானத்துக்கு இடமின்றி தரத்தில் குறைவின்றி வழங்கும் விஜய் டிவியில் சீரியல்கள், ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பிக்பாஸ், குக் வித் கோமாளி, நீயா நானா என சகலமும் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. இதிலும் ஒரு நிகழ்ச்சிக்கு இன்னொரு நிகழ்ச்சி சளைத்ததில்லை என்பது போல், அனைத்து சாரரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளாக அனைத்துமே உள்ளன.
சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சி:
அதிலும் விஜய் டிவியின் பாடல் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். குறிப்பாக ஜூனியர் சூப்பர் சிங்கர் என்று சொல்லப்படும் மழலைகள் பாடக்கூடிய பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். இதற்காகவே பலரும் இந்த நிகழ்ச்சியை காண்பது உண்டு. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரும் வெள்ளித்திரையில் பாடகர்களாகியுள்ளனர். அந்த வகையில் ரசிகர்களின் ஏகோபித்த அன்பும் அபிமானமும் பெற்ற அடுத்த கட்ட பாடகர்கள் இப்போது வெற்றி அடைந்துள்ளனர்.
கிராண்ட் ஃபினாலே :
இந்த ஆண்டில் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒளிபரப்பானது. மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியும் தொடக்கத்தில் இருந்தே சூடுபிடித்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் அபீனா, ட்ரினிடா, நேஹா, கிரிஷாங், ரிஹானா ஆகிய 5 பேர் ஃபினாலேவுக்கு தகுதி பெற்றனர்.
வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கிய யுவன் :
அதன்ப்டி பிரம்மாண்டமாக நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 இறுதிச் சுற்றில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த சீசனில் டைட்டிலை கிருஷாங் வென்றுள்ளார். அவருக்கு 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாம் இடத்தை ரிஹானா (முதல் ரன்னர் அப்) பெற்றார். அவருக்கு 5 லட்சம் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.
இதேபோல் இரண்டாம் இடத்தை நேஹாவும் (2வது ரன்னர் அப்) பெற்றார். அவருக்கு 3 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 5 சவரன் தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது.