நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கில் முக்கியமான ஆக்ஷன் நடிகராக புகழ்பெற்றவர்.

பழம்பெரும் நடிகர் என்.டி.ராமாராவின் பேரனும், நடிகர் பாலகிருஷ்ணாவின் மகனுமான ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கில் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரணுடன் இணைந்து ஆர்.ஆர்.ஆர் என்கிற ஹிஸ்டாரிக்கல் ஃபிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் ஜூனியர் என்.டி.ஆர், தான் வாங்கி கார் ஒன்றுக்கு 17 லட்சம் ரூயாய் செலவு செய்துள்ளார். ஆம், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், எஸ்.எஸ்.ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்புகளுக்காக ரஷ்யா சென்றபோது ஒரு லாம்போர்கனி காரை வாங்கியுள்ளார்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் Lamborghini Urus Graphite Capsule லிமிட்டடு எடிஷன் காரை 3 கோடியே 16 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இந்தியாவில் இந்த லாம்போர்கனி காரை வாங்கிய ஒரே நபர் ஜூனியர் என்.டி.ஆர் என கூறப்பட்டு வருகிறது.
இந்த காருக்கு, தனக்கு பிடித்த அல்லது அதிர்ஷ்ட எண் என கூறப்படும் 9-ஆம் நம்பரை குறித்து 9999 என்கிற பேன்சி நம்பர் கொண்ட நம்பர் பிளேட்டை, ஜூனியர் என்.டி.ஆர் 17 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல் நடிகர் ராம் சரணும் 4 கோடி ரூபாய் கொடுத்து mercedes காரை அண்மையில் வாங்கியுள்ளார். ராம்சரணிடம் ஏற்கனவே ஃபெராரி கார் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழிழிலும் நடிகர்கள் விஜய், தனுஷ் என பலரும் விதவிதமான மற்றும் புதிய ரக கார்களை வாங்குவதில் ஆர்வம் மிக்கவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: "இது ஏதோ பெருசா இருக்கபோது!".. தெறிக்கவிடும் தல அஜீத்.. வலிமை வில்லனின் வைரல் ட்வீட்!