ஆந்திராவை உலுக்கிய துணை நடிகை ஜோதி ரெட்டி மரணம்.. புஷ்பா படத்துல நடிச்சிருக்காங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Andhra Pradesh: துணை நடிகை ஜோதி ரெட்டியின் மரண சம்பவம், தெலுங்கு திரைத்துறையில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

துணை நடிகை ஜோதி ரெட்டி

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த இளம் துணை நடிகை ஜோதி ரெட்டி, கடந்த மகர சங்கராந்தி (நம் ஊர் பொங்கல் மாதிரி) பண்டிகையை ஒட்டி அவருடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ஜோதி ரெட்டி குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் ஐதராபாத்துக்கு வருவதாக சொல்லிவிட்டு கிளம்புயுள்ளார்.

ரயில் தண்டவாளத்தில் ஜோதி ரெட்டி

தமிழகத்தில் இருந்து திரைத்துறைக்கு செல்வோர் கிளம்பி சென்னைக்கு வருவதுபோலவே ஜோதி ரெட்டி தமது சொந்த ஊரில் இருந்து கிளம்பி ஐதராபாத்க்கு வருவதற்காக ரயில் ஏறியுள்ளார். ஆனால் ஷாத்நகர் ரயில் நிலையத்தில் அவர் தண்டவாளத்தில் ரயிலின் முன் விழுந்து துடிதுடித்துக் கிடந்துள்ளதாக அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜோதி ரெட்டியின் மரணம்..

உடனே அந்த மக்கள் ஜோதி ரெட்டியின் உடல் தண்டவாளத்தில் கிடந்தது குறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் சொல்ல அவர்களும் விரைந்து வந்து ஜோதி ரெட்டியை மீட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் துணை நடிகை ஜோதி ரெட்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

உறவினர்கள் போராட்டம்..

இதனிடையே ஜோதி ரெட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்பட்ட தருணத்தில், ஜோதி ரெட்டியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், ரயிலில் ஜோதி ரெட்டி தவறி விழுந்ததற்கான முகாந்திரங்கள் என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஜோதி ரெட்டியின் தரப்பினர் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தெரிகிறது.

புஷ்பா பட பாடல் காட்சிகளில்..

இந்நிலையில் இந்த ஜோதி ரெட்டி புஷ்பா திரைப்படத்தின் பாடல் காட்சிகளில் தோன்றியுள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அந்த பாடல் காட்சிகளில் நடிகை ரஷ்மிகாவின் பின்னணியில் ஜோதி ரெட்டி இடம் பெறும் ஸ்கிரீன் ஷாட்ஸ்களையும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

Also Read: வெறித்தனம்.. Title-னாலே இந்த மனுசன் தான்! தமிழ்ப்படம் இயக்குநருடன் விஜய் ஆண்டனி இணையும் அடுத்த படத்துக்கு பேரு  இதுவா?

தொடர்புடைய செய்திகள்

Junior artist Jyothi reddy death cause and acted pushpa movie

People looking for online information on Junior Artist Jyothi Reddy, Junior artist Jyothi reddy death cause, Jyothi reddy, Jyothi reddy acted pushpa movie, Jyothi Reddy Dead will find this news story useful.