"பிஞ்சிரும் JULIE.. என் செண்ட் பாட்டில TOILET-ல போடுற?".. "தூக்கி அடிச்சிருவேன்" - VANITHA BBULTIMATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossUltimate: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வெர்ஷனில், அதாவது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நாளும் நாளும் ரண களமாகி வருகிறது. அந்த அளவுக்கு ஷோ விறுவிறுப்பாக போகிறது. 

julie flushed perfume in toilet vanitha angry Bigg Boss OTT
Advertising
>
Advertising

பிக்பாஸ் ஓடிடி..

அதன்படி தற்போது பிக்பாஸ் வீட்டில் திருடன், போலீஸ் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் சிலர் போலீசாகவும், சிலர் திருடர்களாகவும் மாறி இருக்கின்றனர். இதில் போலீசார் ஒழுங்காக இருக்க வலியுறுத்த, அடங்காத திருடர்களோ கையும் காலையும் வைத்துக்கொண்டு சும்மா இருப்பார்களா?

julie flushed perfume in toilet vanitha angry Bigg Boss OTT

திருடன் - போலீஸ் டாஸ்க்..

ஆம், திருடர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் பொருட்களை திருடுவது, திட்டமிடுவது, போலீஸ் காரரிடமே பேரம் பேசி கூட்டு சேர்த்துக்கொள்ள முயற்சிப்பது என இல்லாத பொல்லாத வேலைகளை எல்லாம் செய்து அட்டகாசம் செய்தனர். ஆனால் போலீஸ்காரர்கள் ஒவ்வொருவரையும் விரட்டி துரத்தி பிடித்து கொண்டிருந்தனர்.

என்ன இது பிக்பாஸ்?

அப்படித்தான், பாலாஜி முருகதாஸை ஓடிச்சென்று துரத்தி பிடித்த வனிதா, பாலாஜி ஏதோ ஒரு பொருளை உடைத்துவிட, அதை கேமரா முன்பு காட்டி, என்ன இது பிக்பாஸ்? பொருள் எல்லாம் உடைக்குறாங்க.? இதையெல்லாம் ஏற்க முடியாது என கோபமாக கேட்டார்.

மேலும் தன்னிடம் நிறைய மதிப்புமிகு பொருட்கள் உள்ளன, என சொல்ல, அதையெல்லாம் எடுக்கவில்லை என திருடர்கள் கூறுகின்றனர். இல்லை நான் கலந்துகொள்ளவில்லை என சொல்லி வனிதா விளையாட்டில் இருந்து வெளியேறும் விதமாக போலீஸ் யுனிஃபார்மை கலைத்துவிட்டார்.

பிஞ்சிரும் ஜூலி .. செண்ட் பாட்டில டாய்லட்ல போட்டியா?

அதன் பின்பு, ஜூலி வனிதாவின் பெர்சனலான பொருளை ஏதோ எடுத்துவிட்டதாக கண்டுபிடித்துவிட்ட வனிதா, அவரை உட்கார வைத்து கடுகடுத்து பேசுகிறார். அதில், “தெரியாத மாதிரி நடிக்காத ஜூலி.. பிஞ்சிரும் .. எதுல போட்ட? செண்ட் பாட்டில டாய்லட்ல போட்டியா? அசிங்கமா இல்ல? அது எவ்வளவு விலை உயர்ந்தது ? பொருளோட மதிப்பு தெரியாதா? ஸ்ட்ரென்த்த காட்டணுமா நான்?” என சொல்லி, ஷாரிக் ஹாசனுடன் எழுந்த வாதத்தில், “தூக்கி வீசியடிச்சிருவேன்” என பேசினார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிறது. ஒருநாள் முழுவதும் நடக்கும் ஹைலைட்ஸ் விஷயங்கள் அனைத்தும், அன்றைய நாட்களின் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில்  இரவில் ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Also Read: "பிக்பாஸ் என்ன இது? ஒடைச்சிருவேன் வீட்டையே".. உச்சகட்ட கோவத்தில் கொந்தளித்த வனிதா அனல் தெறிக்கும் BBUltimate

தொடர்புடைய இணைப்புகள்

Julie flushed perfume in toilet vanitha angry Bigg Boss OTT

People looking for online information on BBUltimate, BiggBossOTT, Biggbosstamil, BiggBossUltimate, Vanitha, VanithaVijayakumar will find this news story useful.