திடீரென மயங்கி விழுந்த ஜூலி.. என்னங்க ஆச்சு?.. பதறிய ரசிகர்கள்.. அந்த நேரத்துல இதான் நடந்துச்சு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளராக களமிறங்கி இருந்த ஜூலி, தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துள்ளார்.

Julie fell down balaji abirami and others react in bb ultimate
Advertising
>
Advertising

முதல் சீசனில் அதிக விமர்சனங்களை சந்தித்திருந்த ஜூலி, இந்த முறை அப்படியே தலை கீழாக பெயர் எடுத்துள்ளார்.

தன்னை எதிர்த்து பேசும் போட்டியாளர்களை, மிகவும் கூலாக எதிர்கொண்டு, தேர்ந்த நபர் போல பிக்பாஸ் வீட்டிற்குள் வலம் வருகிறார் ஜூலி. அனிதாவுடன் நடந்த மோதலில் அவரை ஜூலி எதிர்கொண்ட விதம், வீம்புக்கு நடந்து கொள்ளும் நிரூப்பை இன்னொரு பக்கம் டீல் செய்வது என முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆளாக ஜூலி திகழ்கிறார்.

மயங்கி விழுந்த ஜூலி

மேலும் ஜூலிக்கு, அபிராமி மற்றும் பாலாஜி ஆகியோர், தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும், ஜூலியின் குணத்தையும் அவர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போது, திடீரென ஜூலி மயங்கி கீழே விழுந்த சம்பவம், அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக, அவரை தூக்கிக் கொண்டு ஓடி வந்த பாலாஜி, ரூமில் படுக்க வைத்தார். இதனைக் கண்டு, மற்ற போட்டியாளர்களும் பதற, ஜூலி அருகே வந்து, அவரை கவனமாக பார்த்துக் கொண்டனர்.

பதறிய போட்டியாளர்கள்

அபிராமி மற்றும் சுருதி ஆகியோர், சர்க்கரை எடுத்துக் கொண்டு வர, ஜூலியின் காலை அழுத்தி விட்டுக் கொண்டிருந்தார் தாமரை. தொடர்ந்து, பிக்பாஸும், ஜூலியை மெடிக்கல் ரூமுக்கு அழைத்திருந்தது. இதனிடையே, ரம்யா பாண்டியன் மற்றும் நிரூப் ஆகியோர் ஒரு பக்கம், டாஸ்க் பற்றி பேசிக் கொண்டிருந்தது பற்றியும், ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காரணம் என்ன?

மேலும், டாஸ்க்கின் போதே, அதிகம் சோர்வான நிலையில் ஜூலி காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முட்டைகளை பாதுகாக்கும் டாஸ்க் ஒன்றிற்காக, கடந்த சில நாட்களாகவே, போட்டியாளர்கள் இரவு நேரத்தில் அதிகம் தூங்காமல் இருந்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, இரவு நேரத்தில் முட்டையைக் காக்க வேண்டி, தூங்காமல் இருந்து வந்த ஜூலி அதிகம் மெனக்கெட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தான், ஜூலியும் சோர்வு அடைந்திருப்பார் என தெரிகிறது. மெடிக்கல் ரூம் சென்றுள்ள ஜூலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Julie fell down balaji abirami and others react in bb ultimate

People looking for online information on Abirami, Balaji, BB Ultimate, BB Ultimate Promo, BiggBoss Ultimate, Julie, Shruthi, Thamarai will find this news story useful.