"JULIE அத பண்ணா, SNEHAN-க்கு என்ன?".. சுருதியிடம் என்ன சொன்னார் சினேகன்?.. கொதிக்கும் நெட்டிசன்கள் BBULTIMATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BBUltimateTamil, 11, பிப்ரவரி 2022 : பிக்பாஸ் அல்டிமேட்டில், ஜூலி கேமரா முன்பாக ரிஜிஸ்ட பண்ணி பேசியிருப்பதும், அதைப்பற்றி சினேகன் சுருதியிடம் பேசுவதும் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

Advertising
>
Advertising

Camera-வை பார்த்து பேசிய Julie

பிக்பாஸ் வீட்டில், camera-வை பார்த்து பேசிய Julie, செய்யாத தப்புக்கு தான் தண்டனை அனுபவிக்க முடியாது என கூறியுள்ளார். இதனால் சுருதியிடம் இதுபற்றி பேசும் சினேகன், “நான் ரொம்ப பியூரா இருப்பேன். ஆனால் ஜூலிக்கு இது 2வது வாய்ப்பு!” என குறிப்பிடுகிறார்.

Also Read: "ஆரம்பிச்சாச்சு.. ஆபரேஷன் க்ளீனிங்".. அத்தன பேரும் நாமினேட் பண்ணிய அந்த 2 பேர்!

மேலும் ஜூலியை பார்த்து “ஏம்மா.. முடிஞ்சு போன பிரச்சனைய திரும்ப திரும்ப சொல்லி பொலம்பாதம்மா” என தம் பார்வையை சினேகன் முன்வைக்கிறார். அதாவது ஜூலி கேமராவை பார்த்து பேசுவதை சினேகன் விமர்சித்துள்ளார். இதனால் சினேகனுக்கு இசைவான கருத்துக்களையே சுருதியும் பேசியுள்ளார். 

மீண்டும் மீண்டும் அதே தப்பை செய்றார்

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், “சினேகன் மீண்டும் மீண்டும் அதே தப்பை செய்வதாக தோன்றுகிறது, ஜூலி அப்படி பேசினால் என்னவாம்? மீண்டும் பல போட்டியாளர்களால் ஜூலி கார்னர் செய்யப்படுகிறார். பாலாஜி முருகதாஸ் பலரது இதயத்தையும் வென்று வருகிறார். குறிப்பாக சினேகனுக்கு தாடியை டிரிம் பண்ணிவிட்ட பாலாவின் ஒற்றை ஃபோட்டோ நெகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது!” என பேசி வருகின்றனர்.

Also Read: "சத்தியமா செத்துருவேன் ஜூலி".. "பண்ணுங்க வனிதா அக்கா".. ஜூலியின் அசுர ஆட்டம் Started!

ஜூலி - attention seeking

இந்நிலையில் ஜூலி கேமராவை பார்த்து தன்னை ரிஜிஸ்டர் பண்ணுமாறு பேசினால், சினேகனுக்கு என்ன வந்தது?  ஜூலியும் attention seeking தான் பண்ணுகிறார்.  சொன்னால், சினேகனும் கேமராவை பார்த்து பேசாமல் அதே  attention seeking வேலையை செய்கிறார்.

எனினும் சினேகன், ஜூலியை அவ்வாறு சொல்ல தேவையில்லை. அதே சமயம், கேமராவைப் பார்த்து பார்வையாளர்கள் முன்னிலையில் தங்களை ரிஜிஸ்டர் பண்ணுவதும் பிக்பாஸில் ஒரு ஸ்ட்ராட்டஜிதான் என்று  பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இவர் மட்டும் புறம் பேசுகிறாரே?

இதனிடையே ரசிகர்கள் சிலர் ஜூலி, பின்னாடி பேசுவதாக சீசன் 1-ல் இருந்து விமர்சிக்கும் சினேகன், இப்போது சுருதியிடம் ஜூலி குறித்து புறம் பேசுகிறாரே? அதையும் சுருதி விமர்சிக்காமல் ஏற்கிறாரே? என்று பேசி வருகின்றனர். இதேபோல், வனிதா தன் கைவிலங்கை அவிழ்த்ததை பற்றியோ அல்லது அனிதா செய்வதை பற்றியோ சினேகன் பேசுவதில்லை, ஆனால் ஜூலியை மட்டுமே விமர்சிக்கிறார் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

சினேகன் கொடுத்த ரிப்போர்ட்

கேமரா முன்பாக தன்னை register பண்ணுவதும் பண்ணாததும் ஜூலியின் விருப்பம் என்று கூறிய ரசிகர்கள் பலரும் ஜூலி காப்பாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர். முன்னதாக அனைவருக்கும் மார்க் போட்டிருந்த சினேகன், ஜூலி மற்றும் வனிதாவுக்கு 8/10 மார்க்கும், மற்றவர்களுக்கு 9/10 மார்க்கும் போட்டு ரிப்போர்ட் கார்டு கொடுத்துள்ளார்.

சினேகன் முன்னேறி வருவார்

இன்னும் சில ரசிகர்கள் சினேகன் எவ்வளவோ தன்னை மாற்றிக்கொண்டு, பாசிடிவாக முன்னேறி வருகிறார். அவரிடத்தில் கோபம் இருக்கும் அளவுக்கு விவேகமும் பொறுமையும் குடிகொள்ளத் தொடங்கியுள்ளது. நிச்சயமாக நீண்ட நாட்கள் நின்று ஆடக்கூடியவர் ஆடவும் செய்வார் என்று கூறிவருகின்றனர்.

Also Read: 'V1' ஹீரோவின் அடுத்த சம்பவம்.. அதுவும் செம்ம ஜானர்ல.. பூஜையுடன் வெளியான ‘த்ரில்லர்’ அறிவிப்பு

தொடர்புடைய இணைப்புகள்

Julie camera registering snehan criticized BBUltimate

People looking for online information on Bigg Boss OTT, Bigg Boss Tamil, Julie, Julie attention seeking, Julie registering, Julie troll, Juliee, Snehan, Snehan julie, Snehan troll will find this news story useful.