IT'S OFFICIAL: ஜூனியர் NTR-ன் ஜோடி இவர் தான்..! - இயக்குநர் ராஜமௌலியின் RRR படத்தின் மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பாகுபலி’ திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் RRR திரைப்படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் கதாநாயகி மற்றும் வில்லன்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும்  RRR படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதில் ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட்-ம், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை டைசியும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஹாலிவுட் நடிகை டைசி எட்கர் ஜோன் படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சுமார் 70% நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்ததுடன், ஜூனியர் என்.டி.ஆரின் ஜோடி மற்றும் வில்லன்கள் குறித்த அறிவிப்பு இன்று (நவ.20) வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை ஒலிவியா மோர்ரிஸ் நடிக்கவுள்ளார். இவர் ஜெனிஃபர் என்ற கேரக்டரில் நடிக்கிறார்.

இதேபோல், படத்தின் வில்லனாக ஐரிஷ் நடிகர்கள் ரே ஸ்டீவென்சன் மற்றும் அலிசன் டூடி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் ரே ஸ்டீவென்சன் ஸ்காட் என்ற கேரக்டரிலும், அலிசன் டூடி லேடி ஸ்காட் என்ற கேரக்டரிலும் நடிக்கின்றனர்.

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராமராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படமாக, 1920-களில் காலக்கட்டத்தில் நடக்கும் கற்பனை கதையாக இப்படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளில் பேன் இந்தியா படமாக உருவாகும் இப்படம் வரும் 2020ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jr NTR Ram Charan SS Rajamouli's RRR film gets Olivia Morris as heroine onboard

People looking for online information on Ajay devgan, Alia Bhatt, Jr ntr, Ram Charan, S S Rajamouli will find this news story useful.