பாகுபலி ராஜமௌலி இயக்கும் RRR படத்தின் GLIMPSE வீடியோ! வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வரவிருக்கும் படம் "RRR".

Advertising
>
Advertising

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார். அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் வெளியீடு, சில காரணங்களால் தள்ளிப்போனது.

இந்த RRR படம் அடுத்த வருடம் 2022 ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகிறது. தல அஜித்தின் வலிமை படமும் பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபாஸின் ராதேஷ்யாம், பவன் கல்யானின் பீம்லா நாயக், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பட்டா படங்களும் பொங்கல் மஹா சங்கராந்திக்கு வருகின்றன. 

இந்நிலையில் இந்த படத்தின் 40 நொடி முன்னோட்ட கிளிம்ஸ் வீடியோ வருகிற நவம்பர்  1 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரத்யேக போஸ்டர் மூலம் இதனை படக்குழு உறுதிச் செய்துள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

Jr NTR Ram Charan RRR Movie glimpse will be released on

People looking for online information on Jr ntr, Raja Mouli, Ram Charan will find this news story useful.