இந்தோ-கனடிய பாடகியான ஜோனிடா காந்தி (Jonita Gandhi). டெல்லியில் பிறந்த கனடா வாழ் பாடகரான இவர் இதுவரை ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.
குறிப்பாக ஷாருக் கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் பாடிய பாடலை தொடர்ந்து ஜோனிடா காந்தியை பலரும் அறிந்துகொண்டனர். தொடர்ந்து பல மொழி பாடல்களை பாடிய ஜோனிடா காந்தி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஓர் இந்தித் திரைப்படத்தில் பாடினார். இதனைத் தொடர்ந்து, தமிழ்த் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார். ஆம், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்த ஓகே கண்மணி படத்தில் ஜொனிடா காந்தி பாடிய தமிழ்ப்பாடல் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து அனிருத் ரவிச்சந்தரின் இசையில் ஜோனிடா பாடிய இறைவா, செல்லம்மா செல்லம்மா (டாக்டர்), அரபிக் குத்து (பீஸ்ட்) ஆகிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆன பாடல்களாக மாறின. இப்படி பிஸி பாடகியாக வலம் வரும் ஜோனிடா காந்தி (Jonita Gandhi), தற்போது விநாயக் என்பவரது இயக்கத்தில் தமிழில் உருவாகும் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தங்களது ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன், ஏற்கனவே ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பிலான வெளிப்படங்களாக ராக்கி, கூழாங்கல் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ படம் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தமது ட்விட்டரில், “வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் படம் மூலம் பிரபல அழகான திறமையான ஜோனிடா காந்தியை நடிகையாக, ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் எங்களுக்கு பிரியமான படத்தில் இம்முறை அறிமுகப்படுத்துகிறோம். ” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read | இந்த Week End ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் - முழு விபரம்.