ஜானி டெப் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஆம்பர் ஹெர்ட் இடையேயான வழக்கில் ஜானி டெப்பிற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Also Read | "நான் அவங்க Control-ல தான்".. BB ஜோடியில் ஆடி முடிச்சதும் பாவனி பற்றி அமீர் வைரல் பேச்சு..
ஜானி டெப்
1984 ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் கால் பதித்த ஜானிக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத்தந்தது பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சீரிஸின், 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் தான். ஹாலிவுட் வட்டாரத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக கருதப்படும் ஜானி டெப்பிற்கும் நடிகை ஆம்பர் ஹெர்ட்டுக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அடுத்த 15 மாதங்களில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
மீண்டும் வழக்கு
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில் குடும்ப வன்முறையால் தான் பாதிக்கப்பட்டதாகவும், குடும்பத்தில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும் ஆம்பர் எழுதியிருந்தார். இந்த கட்டுரையில் ஜானி டெப்பின் பெயரை ஆம்பர் குறிப்பிடவில்லை. ஆனாலும், இந்தக் கட்டுரை வெளியான சில நாட்களில் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் 6-வது பாகத்திலிருந்து ஜானி டெப் நீக்கப்பட்டது ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வெற்றி
இந்நிலையில், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஆம்பர் ஹெர்ட் மீது வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். உலகம் முழுவதிலும் இருந்து பலராலும் நேரலையாக பார்க்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்தது. இதில், ஜானி டெப்பிற்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இதன்மூலம், ஜானி டெப்பிற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை இழப்பீடாக வழங்கும்படி ஆம்பர் ஹெர்ட்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
உருக்கம்
வழக்கில் வெற்றிபெற்றதை தொடர்ந்து ஜானி டெப் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, என் வாழ்க்கை, என் குழந்தைகளின் வாழ்க்கை, எனக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கை, மேலும், பல ஆண்டுகளாக என்னை ஆதரித்து நம்பிய மக்களின் வாழ்க்கை அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் மாறிப்போனது. ஊடகங்கள் வழியாக என் மீது பொய்யான, மிகத் தீவிரமான மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது உலகம் முழுவதும் பரவி என் தொழில்முறை வாழ்க்கையை அசைத்துப் பார்த்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நடுவர் மன்றம் என்னுடைய வாழ்க்கையை திருப்பியளித்திருக்கிறது. இந்த வழக்கில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய வாழ்வின் புதிய அத்தியாயம் துவங்கிவிட்டது. உண்மை ஒருபோதும் வீழ்ந்ததில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் மனைவிக்கு எதிரான வழக்கில் வெற்றபெற்றதை அடுத்து ஜானி டெப் வெளியிட்ட இந்த பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Also Read | 'விக்ரம்' பாத்துட்டு.. உதயநிதி போட்ட ட்வீட்.. பதிலுக்கு கமல் கொடுத்த ரியாக்ஷன்.. வைரல் பதிவு