வழக்குல ஜானி டெப் ஜெயிக்க காரணமா இருந்த வழக்கறிஞருக்கு அடிச்ச ஜாக்பாட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜானி டெப் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஆம்பர் ஹெர்ட் இடையேயான வழக்கில் ஜானி டெப்பிற்கு ஆதரவாக வாதாடிய கேமிலி வாஸ்குவேசுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அவரது நிறுவனம்.

Advertising
>
Advertising

Also Read | கார்த்தி & அதிதியின் Chartbuster ‘கஞ்சா பூவு கண்ணால’… விருமன் சிங்கிள் படைத்த சாதனை

ஜானி டெப்

1984 ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் கால் பதித்த ஜானிக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத்தந்தது பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சீரிஸின், 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் தான். ஹாலிவுட் வட்டாரத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக கருதப்படும் ஜானி டெப்பிற்கும் நடிகை ஆம்பர் ஹெர்ட்டுக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அடுத்த 15 மாதங்களில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

வழக்கு

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில் குடும்ப வன்முறையால் தான் பாதிக்கப்பட்டதாகவும், குடும்பத்தில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும் ஆம்பர் எழுதியிருந்தார். இந்த கட்டுரையில் ஜானி டெப்பின் பெயரை ஆம்பர் குறிப்பிடவில்லை. ஆனாலும், இந்தக் கட்டுரை வெளியான சில நாட்களில் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் 6-வது பாகத்திலிருந்து ஜானி டெப் நீக்கப்பட்டது ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

15 மில்லியன் டாலர் 

இந்நிலையில், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஆம்பர் ஹெர்ட் மீது வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். உலகம் முழுவதிலும் இருந்து பலராலும் நேரலையாக பார்க்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் முடிவடைந்தது. இதில், ஜானி டெப்பிற்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம், ஜானி டெப்பிற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை இழப்பீடாக வழங்கும்படி ஆம்பர் ஹெர்ட்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாக்பாட்

இந்நிலையில் ஜானி டெப்பிற்கு ஆதரவாக வாதாடிய கேமிலி வாஸ்குவேஸ் உலக அளவில் கவனம் பெற்றார். வழக்கின் முக்கிய தருணங்களில் அசாதாரண முறையில் வாதாடி வழக்கை ஜானி டெப்பிற்கு சாதகமாக்கினார். இதனால் சோசியல் மீடியா முழுவதும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.  இந்நிலையில் கேமிலி பணியாற்றிவரும் Brown Rudnick எனும் நிறுவனம் அவரை பார்ட்னராக அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம் அதில்,"கேமிலி எங்களது நிறுவனத்தின் பார்ட்னராக பதவி உயர்வு பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் இடையேயான வழக்கில் ஜானி வெற்றிபெற்றதற்கு கேமிலினின் உழைப்பும் முக்கியகாரணமாகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு குறித்து பேசிய கேமிலி,"என்மீது நம்பிக்கை வைத்து என்னை நிறுவனத்தின் பார்ட்னராக அறிவித்ததற்கு மிக்க நன்றி" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Also Read | சாய் பல்லவி நடிக்கும் புதிய தமிழ்ப்படம்.. தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Johnny Depp lawyer Camille Vasquez promoted to partner after won

People looking for online information on ஆம்பர் ஹெர்ட், கேமிலி, ஜானி டெப், Johnny Depp, Johnny Depp lawyer Camille Vasquez will find this news story useful.