தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது தொடுத்திருந்த வழக்கில் ஜானி டெப் வெற்றிபெற்றிருந்த நிலையில், ஜானி டெப் குறித்து ஆம்பர் ஹெர்ட் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
Also Read | “அவங்க நடிப்பு ராட்சசி…” டிரைலர் பார்த்து பாராட்டிய கமல்… உற்சாகமான ‘செம்பி’ படக்குழு
ஜானி டெப்
1984 ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் கால் பதித்த ஜானிக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத்தந்தது பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சீரிஸின், 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் தான். ஹாலிவுட் வட்டாரத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக கருதப்படும் ஜானி டெப்பிற்கும் நடிகை ஆம்பர் ஹெர்ட்டுக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அடுத்த 15 மாதங்களில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
வழக்கு
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில் குடும்ப வன்முறையால் தான் பாதிக்கப்பட்டதாகவும், குடும்பத்தில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும் ஆம்பர் எழுதியிருந்தார். இந்த கட்டுரையில் ஜானி டெப்பின் பெயரை ஆம்பர் குறிப்பிடவில்லை. ஆனாலும், இந்தக் கட்டுரை வெளியான சில நாட்களில் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் 6-வது பாகத்திலிருந்து ஜானி டெப் நீக்கப்பட்டது ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
15 மில்லியன் டாலர்
இந்நிலையில், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஆம்பர் ஹெர்ட் மீது வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். உலகம் முழுவதிலும் இருந்து பலராலும் நேரலையாக பார்க்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் முடிவடைந்தது. இதில், ஜானி டெப்பிற்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம், ஜானி டெப்பிற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை இழப்பீடாக வழங்கும்படி ஆம்பர் ஹெர்ட்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
வெறுப்பு
இந்நிலையில் வழக்கிற்கு பிறகு முதன்முறையாக மனம் திறந்துள்ள ஆம்பர் ஹெர்ட்,"சராசரி மனிதர்கள் இந்த விஷயங்களை அறிந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வெறுப்புக்கும் துவேஷத்துக்கும் நான் தகுதியானவள் என்று உறுதியாக நம்பும் ஒருவர் கூட சமூக வலைதளங்களில் நியாயமான கருத்துக்கள் முன்வக்கப்படுகின்றனவா என்பது குறித்து சிந்திப்பதில்லை. நான் பொய் சொல்கிறேன் என்று அவர்கள் நினைத்தாலும் நான் அதனால் கவலைப்பட போவதில்லை" என்றார்.
சமூக வலை தளங்களில் தனக்கு எதிரான கருத்துக்கள் அதிகளவில் பரப்பப்படுகின்றன எனக் கூறிய ஆம்பர்,"நான் அவர்களை குறைகூற மாட்டேன். அவர்கள் (மக்கள்) ஜானி டெப்பை அறிந்தவர்கள் போல செயல்படுகிறார்கள். ஆனால், ஜானி மிகச் சிறந்த நடிகர்" என்றார்.
ஆம்பர் ஹெர்ட் மீது ஜானி டெப் தொடுத்திருந்த வழக்கில், ஜானி டெப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளிவந்த நிலையில் முதன்முறையாக ஆரம்பர் ஹெர்ட் மனம் திறந்திருப்பது ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
Also Read | சிகிச்சைக்காக இன்று அமெரிக்கப் பயணம்….Airport-ல் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் TR