"13 வருடத்தில் எனக்கு இது FIRST TIME".. 'துணிவு' டப்பிங்கில் இருந்து 'சார்பட்டா' நடிகரின் வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் நடிப்பில் 'வலிமை' படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

Advertising
>
Advertising

Also Read | லேட்டஸ்ட் லுக்கில் அஜித்.. பிறந்தநாளில் AK-வை சந்தித்த 'துணிவு' பட பிரபலம்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வலிமை ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு தற்போது துணிவு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர். நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

இந்த படம் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் நடிகர் ஜான் கொக்கன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் துணிவு படத்திற்காக இயக்குனர் H.வினோத் மேற்பார்வையில் டப்பிங் பணிகளை மேற்கொண்டு வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், "துணிவு படத்திற்காக தமிழில் முதல் முறையாக டப்பிங்.

அஜித் குமார் சாரின் படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசியது மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்தது, இதைவிட சிறப்பாக எதுவும் அமையாது. இந்த வாய்ப்பிற்காக கடவுளுக்கு நன்றி.

13 வருடங்களில் 5 மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிறகு என் வாழ்க்கையில் முதல் முறையாக  தென்னிந்திய மொழியில் டப்பிங் பேசியுள்ளேன்.

H. வினோத் சார், என் மீது நீங்கள் காட்டிய நம்பிக்கைக்கு நன்றி.

என்னுடன் தமிழில் மட்டுமே பேசி எனது தமிழை மேம்படுத்த உதவிய எனது மேலாளர் கண்ணன் அவர்களுக்கு நன்றி. நான் அஜித்குமார் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்." என ஜான் கொக்கன் பதிவிட்டுள்ளார்.

Also Read | 'தங்கலான்'.. ஷூட்டிங்கில் பா. ரஞ்சித்.. விக்ரம் எடுத்த வைரல் ஃபோட்டோ..

தொடர்புடைய இணைப்புகள்

John Kokken started Dubbing for Thunivu movie

People looking for online information on Ajith Kumar, John Kokken, Thunivu, Thunivu Movie Update will find this news story useful.