நடிகர் அஜித்குமார் நடிப்பில் 'வலிமை' படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

Also Read | கார்த்தி - ராஜூ முருகன் இணையும் புதிய படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்! HIT காம்போ இது
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வலிமை ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.
வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு தற்போது துணிவு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.
இந்த படம் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் ஜான் கொக்கன் இன்ஸ்டாகிராம் பதிவில் ரசிகர் ஒருவர் "துணிவு வில்லன்" என கமெண்ட் செய்துள்ளார். இந்த கமெண்டுக்கு பதில் அளித்துள்ள நடிகர் ஜான் கொக்கன், "இல்லை, நான் இரண்டாவது லீடாக முதல் முறையாக பாஸிட்டிவ் ரோலில் நடிக்கிறேன்" என ஜான் கொக்கன் பதில் அளித்துள்ளார்.
Also Read | "இப்பதான் பாத்தேன்".. 'ரஞ்சிதமே' முழு வீடியோ பார்த்துட்டு தமன் போட்ட ட்வீட்!