தனது மனைவியான பிரபல நடிகைக்கு நடு ரோட்டில் முத்தம் கொடுத்த நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பெங்களூர்: காதலர் தினத்தை ஒட்டி நடு ரோட்டில் தனது மனைவியான பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்துள்ளார் பிரபல நடிகர்.

Advertising
>
Advertising

வித்தியாசமாக காதலர் தினத்தை கொண்டாடிய அட்லி - ப்ரியா! இந்த இடத்துக்கா போயிருக்காங்க? WOW

நடிகர் ஆர்யா நடிப்பில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த படத்தை பா.இரஞ்சித் தயாரித்து இயக்கி இருந்தார். 70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளே இந்த படத்தின் கதைக்களமாக இருந்தன.

இந்த படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றன. கபிலன், மாரியம்மா, லெட்சுமி, வேம்புலி, டான்சிங் ரோஸ், ரங்கன் வாத்தியார், கெவின் டாடி உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் பிரபலமாகின. இதில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஜான் கொக்கென். தல அஜித்துடன் 'வீரம்' படத்தில் தமன்னாவை கொல்ல வரும் கூலிப்படை தலைவனாக நடித்திருப்பார். தற்போது கே.ஜி.எஃப்- 2’, ’கப்ஜா’ என கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

கேரளாவை சார்ந்த இவர் ஆந்திராவை சார்ந்த நடிகை பூஜா ராமசந்திரனை திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜான் கொக்கன், பூஜா ராமசந்திரன் தம்பதியினர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருவர். அதில் சுற்றுலா, யோகா, உடற்பயிற்சி சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் அதில் அடங்கும்.

இந்நிலையில் ஜான் கொக்கன், பூஜா ராமசந்திரன் காதலர் தினத்தை பெங்களூரில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் கொண்டாடினர். ஜான் கோக்கெனும் பூஜா ராமச்சந்திரனும் சாலையில் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா ராமச்சந்திரன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மாதவன் நடிக்கும் "Rocketry: The Nambi Effect"..! படக்குழு அறிவித்த புதிய ரிலீஸ் தேதி

தொடர்புடைய இணைப்புகள்

John Kokken Kissed Pooja Ramachandran on the road at Bengaluru

People looking for online information on சார்பட்டா பரம்பரை, ஜான் கொக்கென், பூஜா ராமசந்திரன், John Kokken, Pooja Ramachandran, Valentines Day will find this news story useful.