தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர்.. படப்பிடிப்பில் இணையும் சார்பட்டா & துணிவு பட நடிகர்.?.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம்  ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது. ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

John kokken joined in Dhanush Captain miller movie
Advertising
>
Advertising

கேப்டன் மில்லர்  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைந்து தயாரிக்கின்றனர்.  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டர் நாகூரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, த.ராமலிங்கம் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார்.  மாஸ்டர் திலீப் சுப்பராயன், சண்டை காட்சி இயக்கத்தை கவனிக்க உள்ளார், இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

இப்படம் 1930கள்-40களின் பின்னணியில்  பீரியட் படமாக உருவாகிறது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜான் கொக்கன், சந்தீப் கிஷன், நிவேதிதா  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் துவங்கியது.  இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஜான் கொக்கைன் இணைந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. நடிகர் ஜான் கொக்கைன் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதேபோல் அஜித் நடித்த துணிவு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

John kokken joined in Dhanush Captain miller movie

People looking for online information on Arun Matheswaran, Captain Miller, Dhanush, John Kokken, Sarpatta Parambarai, Thunivu will find this news story useful.