#EXCLUSIVE : மோடி இந்தியாவை எப்படி வென்றார்..?! - ராஜு முருகன் அடுத்த சம்பவத்துக்கு ரெடி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ராஜு முருகன் இந்த கொரோனா நேரத்தில் புத்தகங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். 

குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். இதையடுத்து இவர் ஜோக்கர் படத்தை இயக்கினார். சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி அவர் இயக்கிய திரைப்படம் தேசிய விருதை வென்றது. இதையடுத்து இவர் ஜீவா நடிப்பில் ஜிப்ஸி படத்தை இயக்கினார். இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதுகாப்பாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் புத்தகங்கள் குறித்து அவரிடம் பேசினோம். அப்போது அவர் தான் படித்து கொண்டிருக்கும் புத்தகங்களை பற்றியும், வீட்டில் இருக்கும் நேரத்தில் மக்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகங்களை பற்றியும் கூறினார். தற்போது அவர், கரன் தப்பரின் 'Devil's Advocate' என்கிற புத்தகத்தையும், ராஜ்தீப் சர்தேசாய் எழுதிய ''How Modi Won India'' என்கிற புத்தகத்தையும் தீவிரமாக வாசித்து வருகிறாராம். மேலும் அ.சி.விஜிதரன் எழுதியுள்ள ஏதிலி என்கிற புத்தகத்தையும் அவர் தற்போது வாசித்து வருவதாக தெரிவித்துள்ளார். 

தற்போது வீட்டில் இருக்க நேரம் கிடைத்திருக்கும் இவ்வேளையில், 'பெரியார் அன்றும் இன்றும் - முழு தொகுப்பு, அம்பேத்கர் அன்றும் இன்றும் - முழு தொகுப்பு, புதுமைப்பித்தன் கதைகள், வைக்கம் முகமது பஷீரின் நாவல்கள், தியாகு மொழிப்ப்பெயர்த்த மூலதனம், மீட்சி'' உள்ளிட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான புத்தகங்களை வாசிக்கலாம்' என அவர் தெரிவித்துள்ளார். 

தனது படங்களில் சமூகத்திற்கான அரசியலை வலிமையாக பேசி வரும் ராஜு முருகன் தற்போது படித்து வரும் புத்தகங்களை பார்க்கும் பொழுது, இன்னும் அதிக வலிமையுடன் தனது அடுத்த படைப்பிற்கு தயாராகி வருவது தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கொரோனா நேரத்தில் படிக்க வேண்டிய புத்தகங்கள் இயக்குநர் ராஜு முருகன் | jiiva's gypsy director raju murugan opens on books in this coro

People looking for online information on Coronavirus, Gypsy Tamil, Raju murugan will find this news story useful.