தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்படுபவர் கார்த்திக் சுப்புராஜ்.
Also Read | குழந்தைகளுடன் ஊரை விட்டு செல்லும் கண்ணம்மா.. கதறி அழும் பாரதி.. இந்த வார பாரதி கண்ணம்மா!
குறும்பட இயக்குனராக 'ராவணம்', 'துரு', 'நீர்' போன்ற குறும்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், 2012-ம் ஆண்டு 'பீட்சா' படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனரானார்.
தொடர்ந்து 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'மெர்க்குரி', பேட்ட, ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அடுத்ததாக ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போவது குறிப்பிடத்தக்கது. 'ஜிகர்தண்டா' மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன், அம்பிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா இந்த படத்திற்காக 2015 ஆம் ஆண்டு பெற்றார்.
இந்தப் படம் வெளியாகி 8வது ஆண்டு விழாவை முன்னிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும், அதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜிகர்தண்டா - 2 படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் & டீஸர் நேற்று வெளியானது.
ஜிகர்தண்டா முதல் பாகத்தில், சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த நிலையில், இதன் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் SJ சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்திற்கு "ஜிகர்தண்டா டபுள் எஃக்ஸ்" என தலைப்பிட்டு படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருந்தன. இந்த போஸ்டர்களை டிசைனர் டியூனி ஜான் வடிவமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கி உள்ளது என கார்த்திக் சுப்புராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Also Read | "உங்கள் வெற்றிப் பயணம்.." ரஜினிக்கு தனது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்!