LATEST: ஜெயம் ரவி - பிரியா பவானி சங்கர் இணையும் புதிய படத்தின் FIRST அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவிக்கு இன்று 41வது பிறந்தநாள், இதனை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் 28வது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிரியா பவானிசங்கர், முதல் முறையாக ஜெயம் ரவியுடன் இந்த படத்தில் இணைகிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்து வெளியான ‘பூலோகம்’ படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இந்த புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். ஸ்கிரின் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. பூஜையில் படக்குழுவினருடன் ஜெயம் ரவியின் பெற்றோர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற உள்ளது.

ஜெயம் ரவி கடைசியாக பூமி படத்தில்  நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த புதியபடம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Jeyam ravi priya bhavani shankar new movie poojai

People looking for online information on Jayam Ravi, Priya Bhavani Shankar will find this news story useful.