பிரபல இயக்குநருடன் 2வது முறையாக இணையும் ஜெயம் ரவி!!.. முழுவீச்சில் படப்பிடிப்பு! மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன்.

Jeyam Ravi next movie popular director shoot at Tuticorin update
Advertising
>
Advertising

மறைந்த பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் வசனத்தில் உருவான இந்த திரைப்படத்துக்கு இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்த இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

குத்துச் சண்டையை சர்வதேச அரங்கில் சந்தைப்படுத்தி, வியாபாரம் செய்யும் பெருமுதலாளிகளை விமர்சிக்கும் நாயகனின் கண்ணோட்டத்தில், இந்த படத்தின் கதை பயணிக்கும். இந்த படத்தை அடுத்து மீண்டும் ஜெயம் ரவியை இயக்குகிறார் இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன்.

ஆம், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தூத்துக்குடியில் நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டத்தில் இருந்து தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் சென்னையில், தொடங்கப்பட்டுவிட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பொங்கல் நிகழும் போகும் என தெரிகிறது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹார்பரில் நடைபெறவிருப்பதாக கூறப்படும் நிலையில், பூலோகம் திரைப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியுடன், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இணையும் இந்த திரைப்படத்தின் கதைக்களம் எவ்வாறு இருக்கப் போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. இதனிடையே ஜெயம் ரவி, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளவரசராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Jeyam Ravi next movie popular director shoot at Tuticorin update

People looking for online information on ஜெயம் ரவி, படப்பிடிப்பு, பூலோகம், Bhooloham, Jayam Ravi, Latest tamil news, N.Kalyanakrishnan, Tamil cinema news, Tamil latest news, Tamil trending news will find this news story useful.