அதிர்ச்சி!!! சூரி வீட்டார் திருமணத்தில் 10 சவரன் நகை கொள்ளையா?.. நடந்தது என்ன? EXCLUSIVE தகவல்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக அறியப்படுபவர் சூரி. சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தில் அதிக பரோட்டாக்களை சாப்பிட்டு, பந்தயத்தில் ஈடுபடும் சூரி, பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல திரைப்படங்கள் நடித்து வந்த சூரி பல முன்னணி நடிகர்களின் படங்களில் கைகோர்த்து நடித்து, பிரபல காமெடியனாக வளர்ந்தார்.

இதனிடையே சூரி அவ்வப்போது எடுத்து வெளியிடும் போட்டோஷூட்கள் வைரலாகி வருகின்றன. பல படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் சூரி தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்திற்கு மதுரை சென்றுள்ளார். 

மதுரையில் சிந்தாமணி பைபாஸ் சாலையில் இருக்கும் மண்டபத்தில் நடந்த இந்த திருமணத்தின் போது சுமார் ஏறக்குறைய 10 பவுன் சவரன் நகைகளை மணமகள் அறையில் இருந்து மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்று விட்டதாகவும், இதுதொடர்பாக சூரி தரப்பிலிருந்து சூரிய பிரகாஷ் கீரைத்துறை போலீசில் புகார் அளிப்பது இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக நாம் நமது தரப்பிலிருந்து கீரைத்துறை போலீசாரிடத்தில் விசாரித்தபோது, “நடிகர் சூரியின் இல்ல திருமண விழாவில் நகை காணாமல் போன விஷயம் உண்மைதான். அது தொடர்பாக கீரைத்துறை போலீஸாருக்கு சூரி தரப்பில் இருந்து சூரிய பிரகாஷ் என்பவர் முழு விவரத்தையும் பதிவு செய்து புகார் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்!” என்று பிரத்தியேகமாக தகவல்கள் அளித்திருக்கின்றனர்.

நடிகர் சூரி, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை எனும் திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் இந்த திரைப்படத்தில் நாயகனாக சூரி நடித்து வருகிறார். இந்த திரைப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

வடசென்னை, அசுரன் உள்ளிட்ட திரைப் படங்களின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் - எல்ரெட் குமார் தயாரிப்பில் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதேபோல சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்திலும், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் டான் திரைப்படத்திலும் சூரி நடித்து வருகிறார். ஜோதிகா - சசிகுமார் நடிக்கும் உடன்பிறப்பே திரைப்படத்திலும், பிக் பாஸ் முகின் ராவ் நடிக்கும் வேலன் திரைப்படத்திலும் சூரி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “வடிவேலு படத்துக்கு இசையமைக்கிறேன்”.. “ஓவரா பேசிடுவேன்”!.. முதல் முறை மனம் திறந்த சந்தோஷ் நாராயணன்!..  என்ன சொல்லிருக்காரு பாருங்க!

தொடர்புடைய இணைப்புகள்

Jewelry theft at Soori household Exclusive சூரி நடிகர்

People looking for online information on ActorSoori, Soori will find this news story useful.