4வது திருமணம் செய்த ஜெனிஃபர் லோபஸ்..! மாப்பிள்ளை 20 ஆண்டு கால நண்பரா? சுவாரஸ்ய தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Las Vegas:  பாடகி ஜெனிஃபர் லோபஸ் பென் அஃப்லெக்கை திருமணம் செய்துகொண்டுள்ளார். 

Advertising
>
Advertising

பிரபல அமெரிக்க முன்னணி பாடகி ஜெனிஃபர் லோபஸ் (Jennifer Lopez) உலகம் முழுவதும் இசை மற்றும் பாப் இசை விரும்பிகளால் பரவலாக அறியப்படக்கூடிய பாடகர், நடிகை மற்றும் நடனக் கலைஞர். நடனமும் பாட்டும் நடிப்பும் என பன்முகம் கொண்ட இவரது தனியிசை பாப் ஆல்பங்கள் உலக லெவலில் முன்வரிசையில் நிற்பன.

பலரது விருப்ப பாடல்களுள் இவரது ஆன் தி ஃப்ளோ, ஆன் மை வே உள்ளிட்ட பாடல்கள் கட்டாயமாக இருக்கும். இன்னும் பல ஹிட் பாடல்களை படைத்த சுயாதீன கலைஞரான இவருக்கு தான் தற்போது திருமண்ம் ஆகியுள்ளது. ஆம், கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான Gigli படத்தின் படப்பிடிப்பில் இவருக்கு அறிமுகமானவர் பென் அஃப்லெக் (Ben Affleck).

இந்நிலையில் தற்போது ஜெனிஃபருக்கும் பென் அஃப்லெக் என்பவருக்கு தான் லாஸ் ஏஞ்சல்ஸில் திருமணம் நடந்துள்ளது.ஜெனிஃபர் லோபஸ் இத்தனை ஆண்டு காலமாக, அதாவது இவருடன் நண்பராக 20 வருடங்கள் பழகிக் கொண்டிருந்துள்ளார், தற்போது தமது 20 ஆண்டுகால நண்பரை திருமணம் செய்துகொண்டுள்ளார். 

ஜெனிஃபர் லோபஸ்க்கு இந்த திருமணம் 4வது திருமணம் ஏன்று கூறப்படும் நிலையில், பலருக்கு ஜெனிஃபர் லோபஸ் மற்றும் பென் அப்ஃலெக் தம்பதியின் இந்த திருமணம் குறித்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

Jennifer Lopez And Ben Affleck Married In Las Vegas

People looking for online information on Jennifer Lopez And Ben Affleck Married In Las Vegas, Jennifer Lopez Ben Affleck Las Vegas will find this news story useful.