விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா தங்கை திருமணத்தில் அண்ணன் தம்பிகள் அனைவரும் தனித்தனியே மொய் வைக்க, கம்ப்யூட்டர் மொய் டேட்டேபேஸில் ஜீவா - மீனாவின் பெயர் மட்டும் இல்லாமல் போகிறது.
Image Credit : vijay television
Also Read | கேஸ் வாங்கினா பேசமாட்டனா..? இனிதான் அதிகமா பேசுவேன் - டிடிஎப் வாசன் அதிரடி
இது மீனாவின் தந்தை மூலமாக மீனா & ஜீவாவுக்கு தெரியவர, ஜீவா தன் மூத்த அண்ணன் மூர்த்தி உள்ளிட்ட சகோதரர்களிடம் ஆவேசமாக வந்து, “எங்களை அவமானப்படுத்திவிட்டீர்களே.. எனக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்களே!” என அழுது கத்துகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பெருத்த குழப்பம் ஏற்படுகிறது.
ஆனால் இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் கண்ணன் செய்த வேலைதான். ஆம், அவரிடம் மொய்க்கவரை கொடுத்த அவரது அண்ணன் மூர்த்தி 50 ஆயிரம் பணத்தை கொடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் மொய் போடச் சொல்லி அழுத்தம் திருத்தமாக சொல்லி அனுப்பினார். ஆனால் கண்ணனோ, மொய் வைக்கும்போது கதிர் - முல்லை சார்பிலான மொய் பணத்தை முல்லையின் தாயாரிடம் இருந்து பெற்றுக்கொண்டு செல்கிறார். இப்படி மொத்தம் 3 மொய் கவரை கண்ணன் கையில் வைத்துள்ளார். ஒன்று தங்களுடைய சார்பில், இன்னொன்று கதிர் - முல்லை சார்பில் தனியே இருந்த மொய்ப்பணம், 3வது பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரிலான மொய் பணம். அதில்தான் ஜீவா & மீனாவுக்கான மொய்ப்பணம் உள்ளது.
Image Credit : vijay television
ஆனால் கண்ணனோ பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் போடச்சொல்லி தன் அண்ணன் சத்தியமூர்த்தி கொடுத்த மொய்ப்பணத்தை, பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் போடாமல் சத்தியமூர்த்தி - தனலட்சுமி பெயரில் போட்டுவிட்டார். இதனால் ஜீவா - மீனா தம்பதி பெயர் மட்டும் மொய் லிஸ்டில் இடம்பெறாமல் போகிறது. நடப்பது மீனாவின் தங்கை திருமணம் என்பதால், மீனாவின் தந்தை இதை மீனாவிடம் கேட்டுவிட்டதாலும் மீனாவுக்கு அவமானமாகிறது. இதை அவர் ஜீவாவிடம் கேட்க, ஜீவாவோ ஏமாற்றத்தால் கோபமும் அழுகையுமாக அண்ணன் மூர்த்தியிடம் சென்று, இதுநாள் வரை தன் மனதில் இருந்த அத்தனையையும் கொட்டி தீர்த்து விடுகிறார்.
Image Credit : vijay television
அதன்படி, ஜீவாவின் கடையிலேயே இருப்பது, அவருக்கென தனி சம்பாத்தியம் இல்லாததால் எங்கேயும் மரியாதை இல்லாமல் போவது, ஆனால் கண்ணன் வேலைக்கு செல்வது, கதிர் தனி ஹோட்டல் வைத்திருப்பதுடன் சொந்தமாக கார் வாங்கியிருப்பது என அனைத்தையும் பேசிய ஜீவா, தான் மிகவும் உண்மையாக இருந்தும் தனக்கு எதுவும் கிடைக்காது போனதுடன் தனக்கு மேற்கொண்டு அவமானமும் நிகழ்கிறது என்பது குறித்தெல்லாம் ஆவேசமாக பேசி வருத்தப்பட்டார்.
அப்போது மூர்த்தியும் தனமும் அவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், “ஏண்டா இப்படி எல்லாம் பேசுற? இங்க நின்று பேச வேண்டாம்.. வா வீட்டுக்கு போகலாம்” என்று அழைக்கின்றனர். அதற்கு ஜீவாவோ, “நான் வரமாட்டேன், அந்த வீடு உங்கள் வீடு. உங்கள் வீட்டுக்கு நான் வரமாட்டேன். உங்கள் தம்பிகளை அழைத்துக் கொண்டு கிளம்புங்கள்” என்று ஆவேசமாக கூறுகிறார்.
Image Credit : vijay television
மூர்த்தியின் முகம் வெளரி கண் கலங்குகிறது. இந்த சண்டையை கொஞ்சம் எரியும் நெருப்பில் நெய் ஊற்றி தூண்டி விட்டது ஜீவாவின் மாமனாரும் கூட, இருப்பினும் அவர் தாமாக எதுவும் செய்யவில்லை என்றாலும் வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார். முல்லையின் அம்மாவும் அவ்வப்போது ஜீவாவுக்கு எதிராக பேசி சண்டையை அதிகப்படுத்தினார்.
இதனால் ஜீவாவை தவிர மற்ற அனைவரும் வீட்டுக்கு வந்துவிட, இதனிடையே கண்ணனை வீட்டுக்கு வந்த பின்பு தனம் கேள்வி கேட்க, அப்போது கண்ணனின் மனைவி ஐஸ்வர்யா கோபத்தில் பொங்கிவிட்டார். தனத்தை எதிர்த்து பேசினார். அப்போது முல்லை, கண்ணனும் ஐஸ்வர்யாவும் பாதி சம்பளத்தை மட்டுமே வீட்டுக்கு கொடுத்ததாகவும், மீதி 2 மடங்கு சம்பளத்தை தாங்களே வைத்துக்கொண்டதாக போட்டு உடைக்க, ஐஸ்வர்யாவோ, “ஏன் மொத்த பணத்தையும் உங்ககிட்ட கொடுத்துட்டு, ஒவ்வொன்னுத்துக்கும் உங்க கிட்ட வந்து நாங்க கையேந்தி நிக்கணுமா? இந்த வீட்ல நாங்க நிறைய அட்ஜெஸ்ட் பண்ணிகிட்டு கஷ்டப்பட்டுகிட்டுதான் இருக்கோம்” என்கிறார்.
Image Credit : vijay television
அதற்கு மூர்த்தி, “அப்படி யாரும் இங்க கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம்” என கோபமாக கத்த, அப்போது ஐஸ்வர்யா, “நான் மட்டும் போகணுமா? இல்ல நாங்க 2 பேரும் போகணுமா?” என கேட்கிறார்.
Also Read | BREAKING : நடிகர் அஜித் குமாரின் தந்தை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்!