SSMB28: மகேஷ்பாபு படத்தில் இணைந்த பிரபல முன்னணி மலையாள நடிகர்.. BLOCKBUSTER ஹிட் COMBO-ல இது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் புதிய படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார்.

Advertising
>
Advertising

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு.  தற்போது இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் #SSMB28 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்துக்கான அறிவிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் கீழ் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) இப்படத்தை தயாரிக்கிறார். 

Source: Jayaram Instagram

நவின் நூலி எடிட்டராகவும், கலை இயக்குனராக ஏஎஸ் பிரகாஷூம், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளராக எஸ் தமன் மற்றும் ஒளிப்பதிவாளராக பிஎஸ் வினோத் ஆகியோரும் படத்தில் பணிபுரிகின்றனர்.

இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் 81 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது‌.

Source: Jayaram Instagram

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு & இயக்குனர் த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் உடன் நடிகர் ஜெயராம் இருக்கும் BTS புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. த்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த 'ஆல வைகுண்ட புரமுலு' படத்தில் நடிகர் ஜெயராம் அல்லு அர்ஜூனுக்கு  அப்பாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Jayaram for Mahesh Babu Pooja Hegde SSMB28 Trivikram Srinivas

People looking for online information on Mahesh Babu, SSMB28 will find this news story useful.