ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் 25வது திரைப்படத்தின் ஷூட்டிங் பிளான் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ திரைப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக இயக்குநர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நடிக்க சமீபத்திய சென்சேஷன் ஹீரோயின் நித்தி அகர்வால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன்.20ம் தேதி முதல் குற்றாலத்தில் தொடங்கி சுமார் 20 நாட்கள் நடைபெறவுள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்தில் அசுதோஷ் ராணா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இது தவிர, மோகன் ராஜா இயக்கவிருக்கும் ‘தனி ஒருவன் 2’ திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார்.