'கோமாளி' பட ஹீரோயினின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'கோமாளி'. இந்த படத்தில் ஜெயம் ரவியின் பள்ளிப் பருவ காதலியாக ரசிகர்களை வசீகரித்தவர் சம்யுக்தா ஹெக்டே.

தொடர்ந்து தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் 'வாட்ச்மேன்', 'பப்பி' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். மேலும் அவர் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிடும் டான்ஸ் வீடியோக்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு 'மாஸ்டர்' படத்தில் வாத்தி கம்மிங் பாடலை ஜிம்னாஸ்டிக் ஸ்டெயிலில் டான்ஸ் ஆடி பகிர அது வைரலானது. இந்நிலையில் அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள டான்ஸ் வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Jayam Ravi's Comali heroine Samyuktha Hegdes dance video goes viral | கோமாளி பட ஹீரோயின் சம்யுக்தா ஹெக்டேவின் டான்ஸ் வீடியோ வைரல்

People looking for online information on Samyuktha Hegde will find this news story useful.