தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. அடங்க மறு, கோமாளி, பூமி உள்ளிட்ட படங்களில் கடைசியாக நடித்திருந்த ஜெயம் ரவி, அடுத்ததாக பொன்னியின் செல்வன், அகிலன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதில், மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படத்தில், ஜெயம் ரவியுடன் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
ஜெயம் ரவி மனைவியின் இன்ஸ்டா 'ஸ்டோரி'
இதனிடையே, நடிகர் ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் ஆர்த்தி. தொடர்ந்து, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், குடும்பங்கள் தொடர்பான பதிவுகள் என அடிக்கடி பல விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பிரபஞ்சமே களை எடுக்கும்..
இதற்கு மத்தியில், சில நேரத்தில் தன்னுடைய கருத்துக்கள் தொடர்பான பதிவுகளையும் ஆர்த்தி பகிர்ந்து வருவார். அந்த வகையில், தற்போது அவர் குறிப்பிட்டுள்ள கருத்து ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், "உங்களை சுற்றி பொறாமை குணம் கொண்டவர்கள் இருப்பது மிகவும் ஆபத்தானது. நீங்கள் அவர்களை குடும்பத்தில் ஒருவராக, அல்லது நண்பராக பார்த்தாலும் அவர்கள் உங்களை போட்டியாக தான் பார்ப்பார்கள். இந்த பிரபஞ்சமே இறுதியில் அவர்களை களை எடுக்கும். நீங்கள் எதுவும் போராட வேண்டியதில்லை" என இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்த்தியின் பதிவு தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8