PBS & தன்யாவுடன் ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் .. போஸ்டருடன் வெளியான கொலமாஸ் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன், ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | அகற்றப்பட்டதா கால் விரல்? கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 28வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் தொடங்கி, பின்னர் தூத்துக்குடி வரை நடந்துகொண்டிருந்தது.

ஸ்கிரீன் சீன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த இப்படத்தில் ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வத்திக்குச்சி, காலா, ரைட்டர் படங்களில் நடித்த திலீபன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்துக்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவை கையாள, விஜய் முருகன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளார்.

துறைமுகத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தூத்துக்குடியிலும், சில முக்கிய காட்சிகள் சென்னை காசிமேட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன. 80 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கண்டெய்னர் தளத்திலும் படப்பிடிப்பை இயக்குனர் நடத்தியுள்ளார்.

இந்த படத்தில் ஜெயம் ரவி DON ஆக நடிப்பதாக டீசரில் (A1,420) சொல்லப்படுகிறது. மேலும் பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் அகிலன் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டர் ஜெயம் ரவி சினிமாவிற்கு வந்து 19 வருடங்கள் ஆவதை ஒட்டி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஜெயம் ரவியை குறிப்பது போல அகிலன் படத்தின் ஜெயம் ரவி கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தவும் "வந்தான் வென்றான்" என்ற வாசகத்துடன் இந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டு ஜெயம் ரவியை வாழ்த்தியுள்ளது.

செப்டெம்பர் 15, 2022 அன்று இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளது.

Also Read | ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்! First Look எப்போ? தெறி அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi Priya bhavani Shankar Tanya Ravichandran Agilan Movie New Poster

People looking for online information on Agilan Movie, Agilan Movie New Poster, Jayam Ravi, Priya Bhavani Shankar, Tanya Ravichandran will find this news story useful.