நடிகர் ஜெயம் ரவி தமது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடியதுடன், பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார்.
அதாவது இந்த திரைப்படத்தின் கதையின் நாயகனான பொன்னியின் செல்வன் என்கிற ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்த கார்த்தியுடன் படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரமாக, ஜெயராமன், நம்பி என்கிற கேரக்டரில் நடித்திருந்தார்.
இதனிடையே நடிகர் ஜெயராமனுடன் சேர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டிச்சென்று நடிகர் ஜெயம் ரவி வழிபட்டுவந்தார்.
இந்நிலையில் தன் மனைவி மகன்களுடன் பொங்கல் கொண்டாடிய ஜெயம் ரவி, “அன்பு பொங்க ஆசை பொங்க இன்பம் பொங்க இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.