50 ஆம் ஆண்டு மணவிழாவில் நடிகர் ஜெயம் ரவி & இயக்குநர் ராஜாவின் பெற்றோர்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் மோகன் ராஜாவின் பெற்றோருடைய 50 ஆம் ஆண்டு மணவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் 'GOD FATHER'.. சிரஞ்சீவி & சல்மான் கான் FANS-க்கு ட்ரீட் தான்!

ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகம் ஆனார் ரவி. இப்படத்தை இவரது மூத்த சகோதரர் மோகன் ராஜா இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து  எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், எங்கேயும் காதல் ஆகிய படங்கள் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் ஜெயம் ரவி. குறிப்பாக மோகன் ராஜாவின் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு பெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

கடந்த செப்டெம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் பாகம் -1 ல் அருண்மொழிவர்மன் கதாப்பாத்திரத்தில் ரவி நடித்திருந்தார். இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. லைகா நிறுவனம் தயாரித்து வெளிவந்த இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜாவின் பெற்றோர்களான மோகன் - வரலக்ஷ்மி ஆகியோரது 50 ஆம் ஆண்டு திருமண விழா விமர்சையாக நடைபெற்றிருக்கிறது. முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் திருத்தணி முருகன் கோவிலில் இந்த விழா நடைபெற்றிருக்கிறது. இதில் ஜெயம் ரவி மற்றும் ராஜாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

ஜெயம் ரவியின் தந்தை மோகன், 200க்கும் மேற்பட்ட படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட  மொழிகளிலும் பணியாற்றியுள்ள இவர் பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். இதனிடையே மோகன் - வரலக்ஷ்மி தம்பதியின் 50 ஆம் ஆண்டு திருமண விழாவை முன்னிட்டு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | பாரிஸ் நகர சாலைகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்... வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi parents 50th anniversary celebrated at Tirutani

People looking for online information on Jayam Ravi, Jayam Ravi parents 50th anniversary, Tirutani will find this news story useful.