BREAKING: ஜெயம் ரவி & நயன்தாரா நடிக்கும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் … TITLE இதுதானா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகியோர் தனி ஒருவன் படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

ஜெயம் ரவி…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இது தவிர இயக்குனர் அஹமது இயக்கும் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

அடுத்தடுத்த படங்கள்…

பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் ஜெயம் ரவி அகிலன் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கும் படம் மற்றும் அறிமுக இயக்குனர் ஆண்டனி இயக்கும் படம் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

புதிய படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா…

இந்நிலையில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் ‘இறைவன்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு பிரபல இசையமைபபளர் ஹாரிஸ் ஜெயராக் இசையமைக்க உள்ளதாகவும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஜெயம் ரவி ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி தாம்தூம், எங்கேயும் காதல் மற்றும் வனமகன் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து பணியாற்றி ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi nayanthara new movie titled as IRAIVAN

People looking for online information on Harris Jayaraj, Jayam Ravi, Nayanthara will find this news story useful.