நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
Also Read | பிரபல போட்டோகிராபர் உடன் இணைந்து போட்டோ ஷூட்.. Monochrome -ல் கலக்கிய மாளவிகா மோகனன்
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இந்த படத்தில் பொன்னியின் செல்வன் அருண்மொழி வர்மன் என்ற உடையார் ஶ்ரீ ராஜ ராஜ சோழ தேவர் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து, கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், அகிலன் திரைப்படத்திலும், எம். ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும், அகமது இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆண்டனி இயக்கத்தில், ஜெயம் ரவி புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு தற்போது வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயம் ரவி - ஆண்டனி இணையும் படத்தில், ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆரம்பமாக இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவியின் 31வது படமாக இந்த படம் உருவாக உள்ளது.
Also Read | போடு.. BOX OFFICE-ல் பட்டையை கிளப்பிய 'சீதா ராமம்'.. அடுத்து இந்த மொழியிலும் ரிலீஸ் ஆகுதாம்!